கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பான தகவல்களை சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது தாக்குதல்

 
செய்தியாளர் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாம்பூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி இறந்து போன சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பள்ளி கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி கலவரம்: 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | Kallakurichi riot:  108 people appeared in court - hindutamil.in

இந்நிலையில் மூடப்பட்டிருந்த அந்த பள்ளி நீதிமன்ற உத்தரவு உத்தரவுப்படி  பள்ளியை மீண்டும் திறப்பதற்கான ஆயத்த பணிகள் இன்று நடைபெற்று வந்துள்ளது.  இதனை செய்தி சேகரிக்கவும் புகைப்படம் எடுக்கவும் சென்னையில் இருந்து வார பத்திரிக்கை (நக்கீரன்) செய்தியாளர் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித் ஆகியோர் சென்றுள்ளனர். அவர்கள் பள்ளிக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு காரில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலில் அவர்கள் காரை வழிமறித்து சராசரியாக தாக்கி உள்ளனர். அங்கிருந்த பொது மக்கள் 2 பேரையும் மீட்டுள்ளார்கள் .இதில் காயமடைந்த பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . அந்த புகாரில் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் செய்தி சேகரிக்க சென்ற தன்னையும் தனது போட்டோகிராபரையும் அந்த பள்ளியை சேர்ந்த அருள்குமார் என்பவர் அடி ஆட்களுடன்  வந்து, காரில் வந்து கொண்டிருந்த தங்களை தலைவாசல் அருகே காரை வழிமறித்து தாக்கினார்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார். இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.