பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் மீது தாக்குதல் - தினகரன் கண்டனம்!!

 
ttv

பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ்  மீது தாக்குதல் நடத்தியதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tn

கடந்த ஜூலை 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கன்னியாகுமரி சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறந்து போன சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி அந்த பள்ளி மீண்டும் திறப்பதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்த செய்தியை சேகரிக்கவும் , புகைப்படம் எடுக்கவும் சென்னையிலிருந்து வார பத்திரிகையாளர் நக்கீரன் நாளிதழின் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர்  அஜித்குமார் ஆகியோர் பள்ளிக்கு சென்று செய்தி சேகரித்து விட்டு திரும்பினர். அப்போது மர்ம நபர்கள் 10ற்கும் மேற்பட்டோர் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர்  அஜித்குமார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ttn
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ்  உள்ளிட்ட குழுவினர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சியில் ஊடகத்துறையினர் தொடர்ந்து மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல." என்று குறிப்பிட்டுள்ளார்.