ஏன் அடிக்குறத நிறுத்திட்டீங்க விடாம அடிச்சுக்கிட்டே இருங்க.. ஆய்வாளர் ஸ்ரீதர் செய்த கொடூரம்.. பியூலா செல்வகுமாரி சாட்சியம்

 
j

தனக்கு சுகர் இருக்கிறது பிரஷர் இருக்கிறது  அதனால் இனிமேல் தன்னை அடிக்க வேண்டாம் என்று ஜெயராஜ் கேட்டுக் கொண்டதால் போலீசார் அவரை அடிப்பதை நிறுத்திய போது,  மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் பென்னிக்சை அடிப்பதை நிறுத்திக் கொண்ட போது ஆவேசமான ஆய்வாளர் ஸ்ரீதர்,  ஏன் அடிக்கிறத நிறுத்திட்டீங்க விடாம தொடர்ந்து அடிச்சுக்கிட்டே இருங்க என்று சொல்லி உயிர் போகிற வரைக்கும்  அடித்தார்கள் என்று தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி சாட்சியமளித்துள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ்.  அவரது மகன் பென்னிக்ஸ் .  கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜூன் 19ஆம் தேதி அன்று தந்தை மகன் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் .  விசாரணையின் போது விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதில் தந்தை மகன் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  இந்த விவகாரம் உலகத்தையே உலுக்கி எடுத்தது .  ஐநா வரைக்கும் இந்த விவகாரம் சென்றது.   இதனால் இந்த வழக்கு தீவிர விசாரணை நடந்தது.

py

 சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர்,  சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.   இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடந்தது.   இந்த வழக்கில் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட ஒன்பது காவலர்களும் ஆஜரானார்கள்.

 தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ராஜராகி சாட்சியம் அளித்தார்.   தந்தை ஜெயராஜையும் மகன் பென்னிக்சையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய போது பணியில் இருந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவலர்கள் சேர்ந்து தொடர்ச்சியாக தாக்கி உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தினார்கள் .  உயிர் போகும் அளவுக்கு தாக்கினார்கள் என்று சொல்லி இருக்கிறார் .

அவர் மேலும்,   ஜெயராஜை அடித்துக் கொண்டே இருந்தபோது அவர் தனக்கு சுகர் இருக்கிறது பிரஷர் இருக்குது இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.   அதனால் போலீசார் அடிப்பதை நிறுத்தினார்கள்.   அதேபோல் மகன் பென்னிக்ஸ் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டதால் அவரையும் போலீசார் அடிப்பதை நிறுத்தினார்கள்.   இதை பார்த்த ஆய்வாளர் ஸ்ரீதர் ஆவேசப்பட்டு ,  ஏன் இரண்டு பேரையும் அடிப்பதை நிறுத்திட்டீங்க .விடாமல் அடிச்சுக்கிட்டே இருங்க என்று சொல்லி சத்தம் போட்டார்.  மீண்டும் மீண்டும் வந்து அவர்களை அடிக்கச் சொன்னார் என்று சாட்சியம் அளித்துள்ளார்.   இதன் பின்னர் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.