சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதலமைச்சர் பதில் உரையுடன் நிறைவு!!

 
tn

நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதலமைச்சர் பதில் உரையுடன் நிறைவடைகிறது.

tn assembly

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த அறிக்கையின் ஒரு சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்து விட்டு,  சிலவற்றை தானாக சேர்த்து படித்ததாக சர்ச்சை கிளம்பிய நிலையில் ஆளுநரின் உரைக்கு எதிரான தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டு அவையில் நிறைவேற்றப்பட்டது.  இதை தொடர்நது ஆளுநர் அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

tn

இதைத்தொடர்ந்து ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடங்கி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். திமுக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலுரை அளிக்கிறார். இறுதி நாளான இன்று வினாக்கள் விடையுடன் தொடங்கும் சட்டசபை முதலமைச்சர் பதிலுரையுடன் நிறைவடைகிறது.  இருப்பினும் ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் முதலமைச்சரின் பதிலுரையை  புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.