ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்?- ஆறுமுகசாமி பதில்

 
jayalalithaa treatment

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் , ஜெயலலிதாவின் உறவினர்கள் , சசிகலாவின் உறவினர்கள்,  ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  காவல்துறை உயரதிகாரிகள்,  போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.  

Arumugasamy

இதன் பின்னர் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல்  செய்யப்பட்டது. அந்த அறிக்கை பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் இருந்தன.

இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒரு சில கெள்விகளை முன்வைத்தார். அதற்கு பதில் அளித்த ஆறுமுகசாமி, இந்த அறிக்கை குறித்து என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அனைத்திற்கும் பதில் அளித்துவிட்டேன் என்றார். ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்? என வழக்கறிஞர் தமிழ்மணி கேள்வி எழுப்பினார். அதற்கு "சாட்சியங்களின் அடிப்படையில் தான் அறிக்கையில் எம்ஃபார்மிங் குறித்த தகவல்களை அளித்தேன்" என ஆறுமுகசாமி பதிலளித்தார்.  எய்ம்ஸ் தவிர மற்றவைக்கு கருத்து சொல்வதை விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.