ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ரூ. 4.81 கோடி செலவு

 
aஅ

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இதுவரைக்கும் நான்கு கோடியே 80 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது. 

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.  அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று பலர் புகார் எழுப்பியதால் அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 2017 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஜ்

 அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  முன்னாள் முதலமைச்சர்,  அரசு அதிகாரிகள் என்று விசாரணை நீண்டு கொண்டு சென்றது .   ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் சாமி.

அதன்படி சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 இதற்கிடையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு ஆகியிருக்கும் செலவு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.   நீதிபதி, அலுவலர்களின் ஊதியம், மருத்துவம் ,வாடகை , பயணச் செலவுகள்,  தொலைபேசி கட்டணம்,  வாகன பராமரிப்பு , அரசு வழக்கறிஞர்கள் கட்டணம்,  ஒப்பந்த ஊதியம் என்று நான்கு கோடி ரூபாய்க்கு மேல் செல்ல விடப்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது.

 கடந்த 2018 ஆம் ஆண்டு 30 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயும்,   2019ல்   83 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் , 2020 இல் ஒரு கோடியே 8 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயும்,   2021 இல் ஒரு கோடியே மூணு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்,  2022ல்  ஒரு கோடியே 4 லட்சத்து  53 ஆயிரம் செலவிடப்பட்டிருக்கிறது.  

விசாரணையில் 6  நிதியாண்டில்  இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே திமுக அரசு அதிக நிதி செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.