சிவாலயங்களில் இன்று ஆருத்ரா தரிசனம்

 
tn

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

tn

ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் , ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களும் சிவபெருமாள் கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் இன்று  நடைபெறுகிறது.   ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும்.  மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவபெருமான் களி உண்ண சென்றதாக கூறப்படுகிறது.  இன்றைய தினமே ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுகிறது.  

tn

இந்நிலையில் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்யலாம். திரு உத்தரகோசமங்கையில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் சந்தன காப்பில் காட்சி தரும் சிவன், ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் மரகத வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடதக்கது.