கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் - ஸ்டாலின் ட்வீட்..

 
கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் - ஸ்டாலின் ட்வீட்..


முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவர் நினைவைப் போற்றுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

கலைஞர் கருணாநிதியின்  மனசாட்சி என  இன்றளவும் திமுகவினரால் நினைவுகூரப்பட்டு வாஞ்சையாக அழைக்கப்படுபவர்  முரசொலி மாறன். அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த திராவிட இயக்க ஆய்வாளராகவும் அறியப்பட்ட மாறன், கலைஞரைப்போலவே  பத்திரிக்கைத்துறை, எழுத்துத்துறை, ஊடகத்துறை, திரைத்துறைகளில் ஜாம்பவானாக விளங்கியவர்.    திமுகவை  பொறுத்தவரை கலைஞரின் மனசாட்சி, நிழல், கருவிழி என  கலைஞரின் மறு உருவமாகவே விளங்கியவர்  முரசொலி மாறன். அவரது 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  

stalin

இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தில்லியில் திராவிடத்தின் முகம்; உலக அரங்கில் இந்தியாவின் முகம்; வளரும் நாடுகளின் சார்பில் வல்லரசுகளோடு வாதிட்ட திறனாளர்; அத்தனைக்கும் மேலாக கலைஞரின் மனசாட்சி! முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவர் நினைவைப் போற்றுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.