அரசு பள்ளிகளில் நாளை முதல் கலைத் திருவிழா தொடக்கம்

 
school

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறன் வளர்ப்பதற்காக நாளை முதல் தமிழ்நாடு அரசு சார்பில் கலைத் திருவிழா தொடங்கவுள்ளது.

Cg remix dance.. by government school bhatheli - YouTube


அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வளர்ப்பதற்காக கலை திருவிழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதன்படி ஓவியம் கவிதை கட்டுரை பல குரல் பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கலைத்திருவிழா என்கிற தலைப்பில் நடைபெற உள்ளன. அதற்காக ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும், 9 மற்றும் பத்தாம் வகுப்பு,  11, 12 ஆம் வகுப்பு என நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை,வகுப்புகளுக்கு தனித்தனியாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் ஆனது நடத்தப்பட உள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக பள்ளி அளவில் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவில் 29ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள். அதில் வெற்றி பெறுவார்கள் மாவட்ட அளவில் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.