கோவையில் தொடர் குண்டு வீச்சு - கூடுதல் ஆயுதப்படை காவலர்கள் வருகை!!

 
police police

கோவையில் தொடர் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக  பாதுகாப்புக்காக கூடுதல் ஆயுதப்படை காவலர்கள் வருகை புரிந்துள்ளனர். 

tn

கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இன்று காலை பொள்ளாச்சி பாஜக பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசினர். சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் சீதாராமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனத் தணிக்கை

இந்நிலையில் கோவையில் தொடர் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக பாதுகாப்புக்காக கூடுதல் ஆயுதப்படை காவலர்கள் வருகை புரிந்துள்ளனர். மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயுதப்படை காவலர்கள் 1,500 பேர் கோவைக்கு  வருகை புரிந்துள்ளனர்.  கோவையில் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகளின் வீடு, வாகனங்கள் மீதான தாக்குதல் எதிரொலியாக  கூடுதலாக காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று  கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.