ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்! வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் கைது

 
ஓரினச்சேர்க்கை ஓரினச்சேர்க்கை

கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன்.  இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணியாற்றுகிறார். ஓரினச்சேர்க்கையாளரான கங்காதரன் அது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக உள்ளதாக தெரிகின்றன. 

சுப்ரீம் கோர்ட்டில் ஓரினச்சேர்க்கை வழக்கில் 2–ந் தேதி விசாரணை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் உள்ள கங்காதரனின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் சாய்பாபா காலனி தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாள பகுதிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனக் கூறியிருக்கின்றார். இதனையடுத்து கங்காதரன் அந்த வாலிபர் அழைத்த இடத்துக்கு சென்றிருக்கின்றார். அங்கு சென்றபோது  3 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் உடனடியாக கத்தியை காட்டி மிரட்டி கங்காதரன் ஆடைகளை கழற்ற சொல்லியிருக்கின்றனர். பின்னர் அவர்கள் தங்களது செல்போனில் கங்காதரனை நிர்வாணமாக படமெடுத்திருக்கின்றனர். 

இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியிருக்கின்றனர். இந்த நிலையில் சாய்பாபா காலனி போலீசில் கங்காதரன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கங்காதரனை நிர்வாணமாக படம் பிடித்தது, சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த்(21), மாணிக்கம் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடிய நிலையில் போலீசார் கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர். 

இதுபோன்று கோயமுத்தூரில் இருக்கின்ற ஓரினச்சேர்கை விரும்புகின்ற ஆண்களை குறிவைத்து இதுவரை 15க்கும் மேற்ப்பட்டவர்களிடம் இந்த கும்பல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்திருக்கின்றன. இந்த வாலிபர்கள் மீது மேலும் ஒரு வழக்கை பதிந்த போலிஸார் மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.