முதல்வரை இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கைது- 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

 
முதல்வரை இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கைது : 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சமூக வலைத்தளங்களில் முதல்வர் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாசமாக பேசிய பாஜக பிரமுகர் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BJP leader arrested for posting obscene video about Chief Minister |  முதல்-அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் கைது

திருநின்றவூர், அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(32). தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார்.இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.மேலும் தனது சமூகத்தை சேர்ந்த உறவினர் பெண் பட்டியலினத்தவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார் என கூறி பட்டியலினத்தவர்களை கொச்சையாக பேசி அதனை சில தினங்களுக்கு முன்னர் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்துள்ளார்.

இந்த காட்சிகள்  வேகமாக பரவியது தொடர்ந்து பலரும் இணையத்தில் தமிழக காவல்துறை TAG செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தனர்.இந்தநிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் என்பவர் முதல்வர் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்,IT ACT உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பூபதி வெங்கடேசனை திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் ஆவடி அருகே கைது செய்தனர்.இது குறித்து தகவலறிந்து திமுகவினர் காவல்நிலையம் வந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்பதால் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யபட்ட பூபதி ஏற்கனவே திமுகவில் உறுப்பினராக இருந்ததும் அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.