தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மாரடைப்பால் அசாமில் உயிரிழப்பு

 
army man

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன்குளம் கிராமத்தைச் சார்ந்தசெல்வராஜ் என்பரது மகன் மதன் (42), கடந்த 23 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

Tamil Nadu soldier killed in landslide in Assam | அசாமில் நிலச்சரிவில்  சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் இருந்து பணி நிமித்தமாக கல்கத்தாவிற்கு வந்தபோது , அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். இத்தகவல் இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரது மனைவி புஷ்பலதா -  வுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்களின் மரியாதைகள் முடிக்கப்பட்டு, அங்கிருந்து உடல் இன்று மாலை திருமங்கலம் அவரது இல்லத்திற்கு வந்தடைந்தது. அவரது உடல் சாலை மார்க்கமாக தனியார் ஆம்புலன்ஸ்-ல் இராணுவ வீரர்கள் முன்னிலையில் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அங்குள்ள சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அவரது மனைவி புஷ்பலதா கூறும்போது , யாருடைய ஒத்துழைப்பு இன்றி எனது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து,  அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து 4 வயது குழந்தையை பராமரித்து வருவதாகவும்,  இனி எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லாததால் , தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மனக் குமுறலுடன் தெரிவித்தார்.