காந்தி கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகை

 
kஅ

 பிரதமர் மோடி வருகையை  முன்னிட்டு காந்தி கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதை அடுத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகை நடந்துள்ளது.  

 திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நாளை 36 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது .  இதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வருகிறார். இதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்தி கிராமம் செல்கிறார்.  

ம்

 மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி.   காந்திகிராமத்தில் விழா முடிந்த பின்னர் 4:00 மணி அளவில் மீண்டும் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார்.   இதற்காக காந்தி கிராமம் சுகாதார அறக்கட்டளையின் வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் 3 ஹெலிகாப்டர்கள் நிற்கின்ற வகையில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளன. 

 இங்கு இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ஒத்திகை நடந்துள்ளது.   அடுத்தடுத்து பலமுறை ஹெலிகாப்டர்கள் இறக்கி ,  புறப்பட்டு இந்த ஒத்திகை நடந்துள்ளன. பிரதமர் வருகையை முன்னிட்டு காந்தி கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேசிய பாதுகாப்பு படை,  கமாண்டோ உள்பட 4500 க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளார்கள். மதுரை விமான நிலையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.