இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் வீரர்.. ரூ. 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு..

 
இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் வீரர்.. ரூ. 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு.. 

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ள அரியலூர் மாவட்ட இளம் வீரர் கார்த்திக்குக்கு   தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் கார்த்திக், கடந்த மே  மாதம்  இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார்.  இவரது சந்தை செல்வம் வங்கியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தற்போது அவர்  அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார். சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திவரும் இவர்கள்,  ஏழ்மையான நிலையிலும் மகன் கார்த்திக்கை நன்றாக படிக்க வைத்துள்ளனர்.  

இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் வீரர்.. ரூ. 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு.. 

அதேநேரம் கார்த்திக் விளையாட்டில் சாதிப்பதற்கும்  உறுதுணையாக இருந்துள்ளனர்.  பெங்களூர் சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்று வந்த  கார்த்திக், கடந்த  மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார். ஆனால், அவரது பெற்றோர் வறுமையில் இருந்து வருவதால், கார்த்திக் அடுத்தக்கட்டமாக  முன்னேற அவர்களுக்கு அரசு உதவி கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  

ஹாக்கி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

ஊடகங்களில் கார்த்திக் குறித்த செய்தி வெளியானதை அடுத்து, அவருக்கு உதவ அரசு முன்வந்துள்ளது.  முதலமைச்சர் உத்தரவின் பேரில் அரியலூர் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்,  கார்த்திக்கின் பெற்றோரை சந்தித்து  ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், 24-ம் தேதி முதலமைச்சரின் கையால் இந்த தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும்,  கார்த்திக்கின் விளையாட்டு மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.