கேக் தயாரிப்பில் களமிறங்கும் ஆவின்.. அதுவும் இத்தனை ஃப்ளேவர்களா??

 
ஆவின் பால்

 கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு  கேக் தயரிப்பில் இறங்க  ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.   

ஆவின் - கேக்

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  ஆவினில் பால் மட்டுமின்றி தயிர், நெய், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு  வகைகள் என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அறிமுகங்களும் உண்டு.  அப்படித்தான் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆவின் இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கேக்

அந்தவகையில் தற்போது,  கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கருத்தில் கொண்டு கேக் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட்  பிளம் கேக்,  உள்பட 4 வகைகளில்  கேக்கை அறிமுகப்படுத்த உள்ளது.    பால், இனிப்பு வகைகளை தொடர்ந்து கேக் தயாரிப்பில் களமிறங்கும் ஆவின் நிர்வாகம்  கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இந்த மாதமே  அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்றும் ஆவின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.