மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுவன் - சசிகலா வேதனை

 
sasikala

வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

tn

இந்நிலையில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் , "செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன் பிரதீப், வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசு, வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்திட வேண்டும். தனது மகனை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.