மின்சார வாரியத்தில் 101 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

 
tn

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று  வழங்கினார்.

eb

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

mk stalin

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 17 நபர்களுக்கும். இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடத்திற்கு 6 நபர்களுக்கும். மின் கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு 11 நபர்களுக்கும், களப்பணி உதவியாளர் பணியிடத்திற்கு 45 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 3 நபர்களுக்கும். அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 5 நபர்களுக்கும், உதவி வரைவாளர் பணியிடத்திற்கு 1 நபருக்கும், காவலாளி பணியிடத்திற்கு 13 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது.