சென்னையில் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..

 
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால்,  முதல் கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பான தீர்மானம்  மாநகராட்சி கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டது..  

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டத்திற்கு  முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  

சென்னையில் 500 தற்காலிக ஆசிரியர்கள்  நியமனம் - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..

அதில் குறிப்பாக, தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, “சென்னை மாநகராட்சியில் மொத்தம்  281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்தப் பள்ளிகளில்  வறுமை கோட்டிற்கும்  கீழ் உள்ள பிள்ளைகள்  கல்வி பயின்று வருகின்றனர்.  தற்போது  பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆகையால்  , மாணவர்களின் நலன்கருதி   கற்றல், கற்பித்தல் சிறந்த முறையில் நடைபெறும் வகையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். எனவே, பற்றாக்குறையை போக்கும் வகையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிர்ணம் செய்வது பற்றி கல்வி நிலைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடி முடிவு எடுக்கும்.” என்று மேயர் பிரியா தெரிவித்தார்.  

சென்னையில் 500 தற்காலிக ஆசிரியர்கள்  நியமனம் - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..

இதனையடுத்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் , சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும்,   அது முறைக்கேட்டிற்கு வழிவகுக்கும் என்றும்  தெரிவித்தார். மேலும்,   முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்து நிரந்தர ஊதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  
 
இதற்கு பதிலளித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ,  தற்போதைய சூழ்நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், அந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கற்று கொடுப்பதற்கு தேவையான அளவுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.   அதனால், தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும்,  ஆசிரியர்களுக்கான சம்பளம் விரைவில் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.