மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..

 
கல்வி உதவித்தொகை

 மத்திய  அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள கலை , அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியுடைய மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் கல்வி உதவித்திகையை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.  இதில்,   இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம்  3 ஆண்டுகளுக்கு  30,000 ரூபாயும்,  முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வீதம்   2 ஆண்டுகளுக்கு  40,000 ரூபாயும்  கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். அதன்படி 2022 - 2023ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை பெற உதவும் மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,  மேலும் விவரங்களை   www.tndce.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..

முதல் முறையாக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள்  'மாணவர் பதிவு படிவத்தில்' தங்களது சரியான தகவலை  'பதிவு' செய்ய வேண்டும்.   அதாவது,  மாணவர்களின் கல்வி ஆவணங்கள், மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கிக் கிளையின் IFSC குறியீடு எண், வங்கி கணக்கு புத்தகம்,  மாணவர்களின் ஆதார் எண் ;  இல்லை என்றால்  பள்ளியில் இருந்து Bonafide சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆதார் பதிவு ஐடி மற்றும் வங்கி பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும்   விண்ணப்பதாரரின் இருப்பிடத்திலிருந்து  பள்ளி வேறுபட்டிருந்தால்,  பள்ளியில் இருந்து Bonafide ஆகிய சான்றிதழ்களை  வைத்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசு - Union Govt

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, NSP போர்ட்டலில் உள்நுழைவதற்கான இயல்புநிலை உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதைப்பயன்படுத்தி உள்நுழைந்து மேலும் தகவல்களை கொடுக்க வேண்டும்.  மாணவர்கள் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்து கொண்டு பதிவு செய்ய வேண்டும் என்றும்,  மாணவர்கள் ஒரு விண்ணப்பம் மட்டுமே பதிவு செய்ய முடியும் எனவும்,   ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தால் பதிவு செய்த அணைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.