முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்

 
college ttn

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

college reopen

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்   24,341 இடங்களுக்கு இன்று முதல்  செப்டம்பர் 16ம் தேதி வரை இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

college

அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் www.tngasapg.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  தரவரிசைப்பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை 21ம் தேதி தொடங்கும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.