CUET PG தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

 
cuet

CUET PG தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வருகிற 18-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 42 மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Com., MBA., M.Sc., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. வரும் கல்வியாண்டுக்கான  பொதுநுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவு சீட்டு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுநுழைவுத் தேர்வுக்கு, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுவரை மத்திய பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நுழைவு தேர்வுகளை நடத்திவந்த நிலையில், இனி ஒரே நுழைவு தேர்வு மட்டுமே நடத்தப்பட உள்ளது. CUET - UG தேர்வைப் போல் CUET - PG தேர்வும் கணினி அடிப்படையிலான தேர்வாக ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் எனவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், CUET PG தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வருகிற 18-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் cuet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.