சூலூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ஜன்னல் வழியே வீசிய ரூ.1.93 லட்சம்

 
raid

சூலூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் நகராட்சி கமிஷனர் ஜன்னல் வழியாக வீசிய ரூ 1.93 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பதி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் நகராட்சி ஆணையர் சிக்கினார். சூலூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடிர் சோதனை நடத்தினர்.அப்போது  நகராட்சி ஆணையர் நாகிஷெட்டி நரேந்திரகுமார் சட்டவிரோதமாக ரூ.  1.93 வைத்திருந்த லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருவதைப் பார்த்து கமிஷனர் நாகிஷெட்டி நரேந்திர குமார் பணத்தை ஜன்னல் வழியாக அலுவலகம் வெளியே வீசினார். இதனை கவனித்த அதிகாரிகள் உடனடியாக கமிஷனர் ஜன்னல் வழியாக வீசிய  பணத்தை பறிமுதல் செய்தனர். சூலூர்பேட்டையில், கட்டட கட்டுமான அனுமதித் துறையில் பல முறைகேடுகள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.