ஈபிஎஸ் நெருங்கிய நண்பரான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 
Elangovan eps

திருச்சி மாவட்டம் முசிறியில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமான முசிறி எம் ஐ டி கல்லூரி வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நிலப் பரப்பளவு, கட்டிடம் மதிப்பு குறித்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Raids at over 30 places linked to EPS' close aide - Update News 360 |  English News Online | Live News | Breaking News Online | Latest Update News

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளின் தலைவருமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான எம் ஐ டி கல்வி நிறுவனம் முசிறியில் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக திடீர் ஆய்வு செய்து ஏராளமான ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். 

இந்நிலையில் முசிறி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஎட் கல்லூரி, டிப்ளமோ இன் நர்சிங் கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் கல்லூரி வளாகத்தில் உள்ள நில பரப்பளவு, கட்டிடத்தின் மதிப்பு குறித்து அளவீடு செய்து மதிப்பீடு மேற்
கொண்டுள்ளனர். இச்சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட பொறியாளர்களும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் சில மாதங்களுக்கு முன்பு திடீர் ரைய்ட் செய்திருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.