முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு..

 
stalin


2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்த்தியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக முதலமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் , பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிடுந்த துறை சார்ந்த தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அண்மையில்,   தமிழ்நாடு திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகள் வழங்ப்பட்டன.  அதனைத்தொடர்ந்து தற்போது  2018-19, 2019-20-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு..

 அதன்படி ,   2018-19-ல் சிறந்த டென்னிஸ் வீரர்களாக பிருத்வி சேகர் மற்றும் நெடுஞ்செழியன் ,  துப்பாக்கிசூடுதல் வீராங்கனை ஸ்ரீநிவேதா ஸ்குவாஷ் வீராங்கனை சுனைனா சாரா குருவில்லா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.   அதேபோல்  துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சத்குருதாஸ்,  தடகள பயிற்சியாளர் ஜி.கோகிலா, கால்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் கன்னா, வாலிபால் பயிச்சியாளர் எம்.பி. முரளி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   கூடைப்பந்து விளையாட்டு வீரர் வி.பி.தனபால் குமாரும்,  சிறந்த விளையாட்டு அமைப்பாக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கமும்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

tn

2019-20 ஆண்டில்  சிறந்த வீராங்கனைகளாக டேக்வாண்டோ வீராங்கனை அனுசுயா பிரியதர்சினி மற்றும்  டேபிள் டென்னிஸ் வீராங்கனை  செலினா தீப்தி  ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.  அதேபோல்   சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுக்கு  டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தேர்வாஜியிருக்கிறார்.  பயிற்சியாளர்களை பொறுத்தவரை   தடகள பயிற்சியாளர் கே.எஸ்.முகமது நிஜாமுதின், கால்பந்து பயிற்சியாளர் கோகிலா, பேட்மிண்டன் பயிற்சியாளர் ராமசுப்பிரமணியன், வாலிபால் பயிற்சியாளர் ஆரோக்ய மெர்சி ஆகியோருக்கு  முதலமைச்சர்  விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும்,  கபடி போட்டி நடுவர் சுந்தரராஜ் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவருக்கான  விருதை பெறுகிறார்.