பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டி- அண்ணாமலை

 
Annamalai

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வியாசர்பாடி பகுதியில் உள்ள மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு மாணவி பிரியாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிரியாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Image

இதுதொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா அவர்களின் பெற்றோர்களை இன்று சந்தித்து பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டோம்.


சகோதரி பிரியா அவர்களின் நினைவு என்றென்றும் நம்முடன் இருக்கவும் தமிழக கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கவும், கால்பந்து வீரர் ராமன் விஜயன் அவர்களுடன் இணைந்து பாஜக மாபெரும் கால்பந்து போட்டியை நடத்தவிருக்கிறது. மேலும், சகோதரி பிரியா அவர்களின் பெயரில் சிறந்த கால்பந்து வீராங்கனைகளை உருவாக்க ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம். 

Image

இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 10 கால்பந்து வீராங்கனைகளின் அனைத்து பயிற்சி செலவையும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்கும் சொந்த தொகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் போதாது. இரண்டு கோடி ரூபாய் நிவாரணமாக சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்திற்கு திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.