என்னது பாலுக்கு ஜிஎஸ்டியா? குழம்பிய அமைச்சர்! விளாசும் அண்ணாமலை

 
annamalai

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019ம் ஆண்டுக்குப் பிறகு அரசு உயர்த்தாத சூழலில் பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது பால் உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து 35 ஆகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், “ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால்விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால்,  ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே  உயர்த்தப்பட்டுள்ளது.மக்கள் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்படவில்லை. பிற மாநிலங்களிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் விற்கப்படும் பால் விலையோடு ஒப்பிடும் போது சுமார் 10 ரூபாய் குறைவாக தமிழகத்தில் ஆவின் பால் விற்கிறது. வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பாஜக அரசு பாலுக்கு கூட ஜிஎஸ்டி போட்டுள்ளனர்” என தெரிவித்தார். 

 

null


இதனை டிவிட்டரில் விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது.  பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர். பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.