7 நாட்கள் பாஜக கூட்டங்களில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை

 
Annamalai

சூர்யா சிவா, டெய்சி சரண் ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ப்

அந்த ஆடியோவில், சூர்யா சிவா, டெய்சியிடம், நீ அண்ணாமலைகிட்ட போ, மோடி, அமித்ஷா கிட்ட கூட போ, உன்னால என்னை ஒன்னுமே செய்ய முடியாது. உன்னை தீர்த்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இந்நிலையில் இது குறித்து விசாரித்து கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்குழு 7 நாட்களில் அறிக்கையை சமர்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு இந்த சம்பவத்தை விசாரித்து கட்சித் தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனகசபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.