உலகநாடுகளுக்கு இந்தியாதான் குரு- அண்ணாமலை

 
அண்ணாமலை

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், புகழ்பெற்ற சீடரான சுவாமி விவேகானந்தர், 1893ல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்கும் முன்பாக, 1892ஆம் ஆண்டு, பாரதத்தின் தென் எல்லையான கன்னியாகுமரியில், கடல் நடுவே அமைந்திருக்கும் பாறையில் தியானம் செய்து ஞானம் பெற்றார். அந்தப் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் இருந்து இன்று, நமது தேசத்தின் இளைஞர்களை ஆன்மீகப்படுத்தவும், அவர்களின் ஆற்றலை தேசத்தின் நோக்கத்திற்காக செலுத்தவும், "விவேகானந்தா நல்லோர் வட்டம்" ஏற்பாடு செய்த தேசிய இளைஞர் தினத்தை கொண்டாடுவதில், பாஜக பெருமிதம் கொள்கிறது.

சுவாமி விவேகானந்தரின் எண்ணங்களை செயல்படுத்துவதன் மூலம், இந்தியாவை விஸ்வகுருவாக மாற்றும் நமது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு, நம் இளைஞர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் இன்று கிடைத்தது. 2047 ஆம் ஆண்டு இந்தியாதான் உலக நாடுகளுக்கு விஸ்வ குருவாக விளங்கும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா- அமெரிக்கா இடையே கடும் பொருளாதார போட்டி ஏற்படும். மாணவர்கள் குரு இல்லாமல் பயணிப்பது கடலில் எதிர் நீச்சல் அடிப்பது போன்றது. அரேபிய மதங்கள் இயற்கையை அழித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அனைத்து உயிர்களுடனும் இயற்கையோடும் பின்னி பிணைந்துவாழ வேண்டும் என்பதை இந்துமதம் உணர்த்துகிறது.இதுதான் அரேபிய மதங்களுக்கும் இந்து மதத்துக்கும் உள்ள வேறுபாடு” எனக் கூறினார்.