ஆ.ராசா தமிழக தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்- அண்ணாமலை

 
annamalai

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்று வரும் பாஜக பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.

K Annamalai | Latest and Breaking News on K Annamalai | TNIE

அப்போது பேசிய அவர், “தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் ஆ.ராசா. அவரது பேச்சை கண்டித்து குரலெழுப்பிய 107 பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்ந்தால் தமிழக சிறைகள் நிரம்பும் நிலை ஏற்படும். கடைசி பாஜக தொண்டர் இருக்கும் வரை ஆ.ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். சிறைக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை. அவர் வேறு எதற்காகவோ சிறைக்கு சென்றுள்ளார்.

இனி தமிழகத்தில் எங்களது அரசியில் அதிரடியாக இருக்கும். மோடிஜியின் ஆட்சியில் தொடர்ந்து குறைகளை மட்டுமே திமுக அரசு சொல்லி வருகிறது. குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் தான் குறையை பார்ப்பர். ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியுள்ளது தமிழகத்தை இருள் சூழ்ந்துள்ளது. கஞ்சா வியாபாரிகளை கைது செய்யாமல் பாஜகவினரை கைது செய்கிறார்கள். எதிர்த்து பேசக்கூடாது என்கிறார்கள். ஆவின் பால் மூன்று முறை விலை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் பால் விற்கும் விவசாயிக்கு ஒரு முறை கூட உயர்த்தி தரவில்லை” எனக் கூறினார்.