பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது- அண்ணாமலை

 
Annamalai

கோயில்களை  நிர்வாகிக்க இந்து சமய அறநிலையத்துறை  என்பது  தேவை இல்லாத  ஒன்று என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Image

தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும்  ஆலயமேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை கண்டித்து  சென்னை வள்ளுவர்  கோட்டத்தில் உண்ணாவிரத  போராட்டம் நடைப்பெற்றது. பாஜகவினரின் உண்ணாவிரத போரட்டத்தை முடித்துவைத்து பேசிய அண்ணாமலை, “5,309 மாடுகள்  திருச்செந்தூர்  கோவிலில்  மாயம் ஆகி உள்ளது  என தணிக்கை  துறை  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் இந்து சமய அறநிலையத்துறை  என்பது  இருக்காது. அதற்கு  முதல் கையெழுத்து பாஜக அமைச்சர்  போடுவார். மைலாப்பூர்  கபாலீசுவரர்  கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை  சார்பில் நடைபெறும்  கூட்டத்தில் அதிகாரிகள் மிச்சர் , பட்டர் முருக்கு சாப்பிட்டனர். அதுவும் உண்டியல்  பணம்  தான். வடபழனி  முருகன் கோயில் அக்குவா வாட்டர் உள்ளிட்டவைகளை  உண்டியல்  பணத்தில்  செலவு செய்து இருக்கின்றனர். இவைகள்  எல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளின் மூலம் வெளிவந்த தகவல்.


மதுரை  மீனாட்சி கோவிலில் உண்டியல்  காசு எடுத்து 30 லட்சத்தில் கார் வாங்கப்பட்டு உள்ளது. 6 கால பூஜை நிறுத்தப்பட்டு உள்ளது.  பல கோவில் கும்பாபிஷேகம் நிறுத்தபட்டு உள்ளது. 2021 ஆண்டில் ரூ.21 கோடி கோயில் நிர்வாகத்தை தணிக்கை  செய்ய ரூ.70 கோடி பணத்தை  எடுத்து உள்ளனர். கோயில்களை  நிர்வாகிக்க இந்து சமய அறநிலையத்துறை  என்பது  தேவை இல்லாத  ஒன்று. சென்னையில் பிரதான  இடத்தில் கோவில் சொத்து 1 ரூபாய் மட்டுமே சதுரடிக்கு வசூலிக்கப்படுகின்றது கோவில் மூலமாக 1600 கோடி ரூபாய் பணம்  இந்துசமய  அறநிலையத்துறைக்கு ஆண்டுதோறும்  வருகின்றது 

Image


திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு சிலையை கூட மீட்டு கொண்டு வரவில்லை. இருந்தால்  ஒரு ஆவணத்தை  காட்ட வேண்டும் காசி தமிழ் சங்கத்திற்கு  ஏன் தமிழக அரசு வரவேற்கவில்லை, மாறாக  விமர்சனம்  மட்டும் தான் செய்தது. பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் புனரமைப்பு  செய்ய 17லட்சம் செலவு செய்து பெயருக்கு மட்டும் சும்மா செய்து உள்ளனர். இஸ்லாமிய  மற்றும்  கிறிஸ்தவர்களுக்கு  விரோதமாக  பாஜக செயல்படவில்லை. இந்து கோயிலில் மட்டும் அதிகாரிகளிடம் எண்ணெய்  வாங்க கூட அவர்களின்  அனுமதி கேட்க வேண்டியுள்ள கேவல நிலை உள்ளது. இலங்கை யாழ்பாணத்தில் ஒரு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் தமிழகத்தில் அப்படி முடியாது.

இந்து சமய அறநிலை துறை  அமைச்சரிடம் இந்த துறையை  எப்படி நடத்த வேண்டும் என்று யோசனை சொல்ல தயாராக  உள்ளோம், விவாதம் நடத்த தயாராக  உள்ளோம். ராஜராஜ  சோழன் சமாதியை  ஏன் புனரமைப்பு  செய்யவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.