அறநிலையத்துறையே வேண்டாம்- அண்ணாமலை

 
Annamalai

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

Annamalai

போராட்டத்து பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் நாளே அறநிலையத்துறையே வேண்டாம் என்பதுதான் எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாடுகளை காணவில்லை. தமிழகத்தில் கணக்கில்லாமல் கோயில்கள் இடிக்கப்படுகிறது, பக்தர்களின் காணிக்கைகளும் சுரண்டப்படுகிறது, கோயில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் எண்ணற்ற கோயில்கள் இடிக்கப்படுகின்றன. புராதான கோவில் நகைகள் உருக்கப்படுகின்றன. பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகிறது.

பக்தர்களின் வருகைகள் தவிர்க்கப்படுகிறது, அறங்காவலர்கள், தக்கார்கள் நியமனங்கள் தடுக்கப்படுகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மாடுகள் குறித்த பதிவு உள்ளது. ஆனால் அவற்றை ஏலம் விட்டது யார்? மாட்டை திருடி சென்றனரா? என்பது தெரியவில்லை. வடிவேலு கிணற்றை காணும் என சொல்வதுபோல் திருச்செந்தூர் கோயிலில் மாட்டை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்” என சாடினார்.