திமுக- ஆளுநர் பிரச்சனை என்ன? அண்ணாமலை விளக்கம்

 
annamalai

திமுக அரசு எழுதி கொடுத்ததில் உள்ள சில பொய்யான தகவல்களை ஆளுநர் படித்திருந்தால் அவரும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிவிடுவார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

திமுகவுக்கும் ஆளுநருக்கும் பிரச்சனை

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதுதான் திமுகவுக்கும்- ஆளுநருக்கும் இடையில் உள்ள முதல் பிரச்சனை, 2021 ஆம் ஆண்டு திமுக அரசு அனுப்பிய அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அனுப்பபட்ட மசோதாக்களில் 15 மசோதாக்கவுக்கு மட்டுமே ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. 59 மசோதக்களில் 44 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார். மீதமுள்ள 15 மசோதாக்களில் 12 மசோதாக்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்பதுதான். ஆளுநர் அதற்கு கையெழுத்து போடவில்லை. ஆளுநர் அதற்கு கையெழுத்து போட்டாலும் நீதிமன்றத்தில் ஸ்டே ஆகும். கேரளா மற்றும் மேற்கு வங்க ஆளுநர்கள் கூட இந்த மசோதாவுக்கு கையெழுத்துப்போடவில்லை. ஏனெனில் இது மாநில அரசின் வரம்புக்கு இல்லை. ஏன் கையெழுத்து போடவில்லை என்பதற்கான காரணத்தை ஆளுநர் அரசிடம் கூறிவிட்டார். 


மற்றொன்று தமிழ்நாடு கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைக்கக்கூடிய அதிகாரத்தை அதிகாரிகளுக்கு கொடுக்கக்கூடிய மசோதா. இது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. எனவே அதில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. இவ்வளவு காலமாக அதில் உள்ள நடைமுறை என்னவென்றால் ஏதேனும் அதில் பிரச்சனை இருந்தால் ஒரு அதிகாரியை நியமித்து அவர் விசாரணை செய்வார். அதன் பின்பு அந்த உறுப்பினருக்கோ, தலைவருக்கோ நோட்டீஸ் அனுப்பப்படும். உரிய விளக்கம் இருந்தால் கலைக்கப்படும். ஆனால் திமுக கொண்டு வந்துள்ள அந்த புது மசோதா மாநில அதிகாரியே நேரடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே. இதன் மூலம் 40,000 பேரையுமே ஏதோ ஒரு காரணம் சொல்லி டிஸ்மிஸ் செய்ய வைத்து மீண்டும் தேர்தல் நடத்தி திமுகவினரை உட்கார வைப்பர். 

TN BJP head Annamalai warns state govt for threatening Hindu seers

மற்றொரு மசோதா, தனியார் கல்லூரிகளில் ஏதேனும் பிரச்சனை என்றால், அக்கல்லூரியை மாநில அரசு முழுமையாக கையகப்படுத்தும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு சென்றாலும் இந்த 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை, மற்றொரு  மசோதா ஆன்லைன் ரம்மி மசோதா. அதற்கு ஆளுநர் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளார். ஆளுநர் திமுக அரசு அனுப்பிய தீர்மானங்கள் எதெற்கெல்லாம் கையெழுத்து போட்டுள்ளார், எவற்றிற்கெல்லாம் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார், என்று விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு தெரியுமா?” எனக் கூறினார்.