திமுக ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை- அண்ணாமலை

 
Annamalai

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜை மற்றும் 60 ஆவது ஜெயந்தி விழா முன்னிட்டு  இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தேவரின் நினைவிடத்தில் இன்று காலை முதலே பொதுமக்கள்  மலர் தூவையும் மாலை வைத்தும் மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஐ.பெரியசாமி,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி மூர்த்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

உயிர் வாழ முடியவில்லை ..தேவர் ...

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் திண்டுக்கல் சீனிவாசன் செல்லூர் கே ராஜு கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை அறக்கட்டளை பொறுப்பாளர் தங்க மீனாளிடம் வழங்கினார். அதேபோல் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே பாலு,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,வி கே சசிகலா, மதுரை ஆதீனம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்வாண்டையார் தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட  அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் மலர் மாலை அணிவித்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக மண்ணில் மீண்டும் தேவர் வேண்டும் என்ற நிலை உள்ளது. அதிகாரிகள் ஆளும்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற அளவிற்கு தற்போதைய ஆட்சி நடைபெறுகிறது. தமிழக மண் எப்படி இருக்க வேண்டும் என தேவர் நினைத்தாரோ அதனை பாஜக நிறைவேற்றும்” எனக் கூறினார்.