அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் - அண்ணாமலை

 
annamalai

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வையும் மாநில அரசு உயர்த்தும் பல்வேறு விலை உயர்வுகளையும் முடுச்சு போட கூடாது  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திரெளபதி முர்மு முன்னிலையில் இருக்கிறார். அவரை வேட்பாளராக நிறுத்தியது பிரதமர் மோடியின் சமூக நீதி சிந்தனைக்கு எடுத்துக்காட்டு. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அவர்களின் ஒரே ஒரு சாதனை அனைத்து இடத்திலும் விலையை உயர்த்தியதுதான். சொத்து வரி, ஆவின் பொருட்கள் விலை உயர்வு தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசு செய்த தவறிலிருந்து பாடம் கற்காத அரசாக உள்ளது. மக்கள் தான் இந்த அரசை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

மின்கட்டண உயர்வை மத்திய அரசு கூறி தான் உயர்தினோம் என்றார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் மத்திய அரசு கூறவில்லை என்று கூறி விளக்கம் கேட்ட போது மின் துறை அமைச்சர் இதுவரை விளக்கமளிக்கவில்லை.மத்திய அரசின் மீது பழிபோடுவது மட்டும் தான் மாநில அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அமைச்சர்களும், சில கான்ரக்டக்டர்களும் பயன் அடையவே விலைகள் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல், கேஸ் நம்முடைய கையில் இல்லை அது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கும் மாநில அரசு உயர்த்தும் விலை உயர்வுக்கும் முடிச்சு போட கூடாது.

கள்ளகுறிச்சி மாணவி மரணம் விவகாரத்தில் மெளனம் காத்தது தி.மு.க தான். அவர்களின் மெத்தனப்போக்கால் தான் கலவரம் நடந்தது. அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு கெட்ட பெயர் வர காரணம் தி.மு.க வின் செயலின்மை. பாஸ்போர்ட் ஊழல் தனிமனிதன் தொடர்பானது அல்ல இது இந்திய இறையான்மையை பாதிக்கப்பட கூடியது. இது தொடர்பாக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி மீது ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். நிச்சயமாக இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்” எனக் கூறினார்.