திடீரென திருப்பதிக்கு தனியாக நடந்தே சென்ற அண்ணாமலை! “இதுதாங்க என் வேண்டுதல்” என பேட்டி

 
annamalai

திருப்பதி எழுமலையானை தரிசிக்க மலைப்பாதையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  பாதயாத்திரை மேற்கொண்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதி வந்தார். பின்னர் அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு பாத யாத்திரையாக சென்றார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர் திருமலையில் வரவேற்றார். பின்னர் திருமலையில் தங்கிய அண்ணாமலை, இன்று காலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்று,  விஐபி தரிசனத்தில் சுவாமியை வழிப்பட்டார்.


இதனை தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். பின்னர்  கோயில் வெளியே வந்த அண்ணாமலையை சூழ்ந்த பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்தனர். இதில்  கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் சிலர் அண்ணாமலையை பார்த்து அவருடன் பேசி கைகுலுக்கி செல்பி எடுத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை,  “தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ அருள் புரிய வேண்டும் என்று வேண்டி கொண்டேன். அடுத்த மக்களவை தேர்தலில் குறிப்பிட்ட தக்க எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பி வைக்கும். அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சர்களாக பதவியேற்பார்கள்” என்றார்.