அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் - அண்ணாமலை

 
annamalai senthil balaji

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விரைவில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தமிழகத்திலும் வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களிடம் தேசிய கொடிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: கருத்துரிமை, கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். தி.மு.க.வின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞரை வீடு புகுந்து வெளியே தூக்கி வந்ததை முதல் முதலில் கண்டித்தது அப்போதைய பிரதமர் வாஜ்பாய். இப்போது விசாரணைக்காகத்தான் சம்மன் வழங்கி சோனியாவை அழைத்துள்ளார்கள். அதற்காக ரோடுகளை மறிப்பதுதான் ஜனநாயகமா? எல்லாவற்றையும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது.

annamalai

தி.மு.க. ஆட்சியில் ஆவின் போல் முறைகேடு போல பல்வேறு முறைகேடுகள் நடந்து கொண்டே வருகின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறது தி.மு.க., தமிழகத்தில் எப்படியெல்லாம் ஜி.எஸ்.டி. விவகாரத்தில் ஆளும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என்பதை பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் நிர்மலா சீதாராமன் பேசினார். ஆனால் அதை கேட்காமல் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் வெளியேறினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணை பட்டியலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் அமலாக்கத்துறையினர் விரைவில் விசாரிப்பார்கள். இவ்வாறு கூறினார்.