இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் - அன்புமணி

 
anbumani

இளைஞர்களின் எதிர்பார்ப்பு வேலையை வழங்க வேண்டும், பெண்கள் எதிர்பார்ப்பு டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் இதை அனைத்தும் செய்யக்கூடிய ஒரே கட்சி நமது பாட்டாளி மக்கள் கட்சி தான் என பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Anbumani Ramadoss loses cool at press meet | Chennai News - Times of India

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் சரவணக்குமார்- பிரியாமேரி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், மணமக்களை வாழ்த்தினார். 


பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் மாற்றங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் 52 ஆண்டுகளாக இரு கட்சிகளும் ஆட்சி செய்து மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களையும் செய்யவில்லை, விவசாயிகள் எதிர்பார்ப்பு இளைஞர்கள் எதிர்பார்ப்பு பெண்கள் எதிர்பார்த்து அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே செய்ய முடியும் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதில் பெண்கள் எதிர்பார்ப்பு டாஸ்மாக்கை அப்புறப்படுத்த வேண்டும். இளைஞர்களின் எதிர்பார்ப்பு வேலையை வழங்க வேண்டும். இதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி வந்தால் மட்டுமே முடியும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் சமூக நீதிக்கு மற்றொரு பெயர் என்று சொன்னால் அது மருத்துவர் ஐயா என்று தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு சமூக நீதிக்காக பாடுபட்டவர் மருத்துவர் அய்யா ராமதாஸ்.

புதியதாக நோக்கம் உள்ள ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அனைவரும் வளர்ச்சிக்கும் அனைவரின் உரிமைக்கும் பாடுபடும் ஒரே கட்சியாக தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி தான் பகிர்ந்து வருகிறது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் இயற்கை வளங்களை பாதுகாக்க போராடுகின்றது.  தமிழக அரசு வடகிழக்கு பருவமழை காலங்களில் செய்யும் தண்ணீரை கடலில் கலக்க விடாமல் தடுப்பணைகள் அமைத்து அந்த தண்ணீரை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும். ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேண்டுமென்றே அளுநர் எதிர்க்க கூடாது. இதனை இருவரும் கடைபிடிக்க வேண்டும். முதல்வர் ஆளுநரை சந்தித்து, பிரச்சனையை பற்றி பேசி தீர்க்க வேண்டும். அரசுக்கு, ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்” என்றார்.