கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்கனவே மர்ம மரணங்கள் நடந்துள்ளன- அன்புமணி ராமதாஸ்

 
anbumani

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்தில் சிபிசிஐடி விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறித்தியுளார். 

கள்ளக்குறிச்சி பள்ளி

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் 34 ஆண்டு விழாவில் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு, பல்வேறு இடங்களில் பா.ம.க கொடிகளையேற்றி இனிப்புகளை வழங்கினார். முன்னதாக அவருக்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தலைமையில் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித இடஓதுகீடுகாக என அறிவித்தற்கு தான் கடந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம், இனிவரும் தேர்தல்களில் எந்த கட்சியும் கூட்டணியில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அதன் அடிப்படையில் பா.ம.க ஒருமித்த கருத்துள்ள, எண்ணங்கள் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிடும். அதனை தொடர்ந்து மது ஒழிப்பிற்கு முதல் கையெழுத்து போடப்படும், அதிமுக உட்கட்சி பிரச்சினைகள் குறித்து தற்போது கருத்து சொல்லமுடியாது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்தில் சிபிசிஐடி விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அங்கு ஏற்கனவே மர்ம மரணங்கள் நடந்துள்ளதாக புகாரும் உள்ளது” எனக் கூறினார்.