மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல் - அன்புமணி ராமதாஸ்

 
anbumani

இந்த தலைமுறையை மது, போதை, சூது ஆகியவற்றிலிருந்து காப்பாற்ற முடியாது. அடுத்த தலைமுறையை காக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Who is Anbumani Ramdoss, the new PMK president?

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 21 பேர்கள் உயிரிழந்தனர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி ஊரைச் சேர்ந்த தேசிங்கு ராஜன் என்ற இளைஞர் உயிர் நீத்தார் அவரது நினைவிடம் பண்ருட்டி அருகே கொள்ளு காரன் குட்டையில் உள்ளது அவரது நினைவிடத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நன் பகலில் வருகை தந்து ஜெய்சங்கர் ராஜா நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர் அதன் அருகே பாமக கொடியினையும் ஏற்றி வைத்தார்.

பின்பு செய்தியாளரிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயர்நீர்த்த தியாகிகளுக்கு இன்று திண்டிவனம் விழுப்புரம் கடலூர் பகுதிகளில் அவர்களது நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தினோம். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினோம். ஆனால் கடந்த அதிமுக அரசு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியது. அதை இப்போதைய திமுக அரசும் அனுமதி அளித்தது ஆனால் ஒரு சில கயவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால் தமிழக அரசும் பாட்டாளி மக்கள் கட்சியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டில் ஏழில் ஆறு நியாயமாக உள்ளது பழகலாம் என்று ஒன்று மட்டும் தராசு அமைத்து வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் தமிழக அரசு அதற்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர் அதன்பிறகு தமிழக முதல்வரையும் நாங்கள் சென்று பார்த்து கூறினோம். விரைவில் அறிவிப்பதாக கூறினார். ஆனால் ஐந்தரை மாதம் ஆகியும் இதுவரை வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றி வன்னியர்களுக்கான 10 புள்ளி அஞ்சு சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஐந்தரை மாதங்களில் டிஎன்பிசி அறிவித்த வேலை வாய்ப்புகளில் ஆயிரம் கணக்கானோர் வேலை வாய்ப்புக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். தமிழகத்தில் போதை கலாச்சாரம் ஓங்கி நிற்கிறது. போதை கலாச்சாரத்தை ஒழிக்க காவல்துறை மூலம் தனியாக டிபார்ட்மெண்ட்டை உருவாக்கி அதற்கு 20,000 காவல் துறையை பணியாமர்த்த வேண்டும். இருக்கும் போலீசை வைத்து போதை குற்றத்தை ஒழிக்க முடியாது மேலும் போதை பொருள் விற்பவர்கள் கண்டுபிடித்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் டெங்கு வைரஸ் போன்ற வைரஸ் நோய்கள் அதிகமாக பரவி வருகின்றது அது தமிழக அரசுக்கும் தெரியும். எனவே தமிழக அரசு எந்தெந்த பகுதியில் அதிக வைரஸ் தொற்று டெங்கு காய்ச்சல் அதிகமாக இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்க வேண்டும் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை என்று கூறுகின்றார்கள், உடனடியாக தமிழக அரசு போதுமான மாத்திரைகளை கையறுப்பில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றும் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.