நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது - அன்புமணி அறிவிப்பு

 
anbumani

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் பாமக இடம்பெறுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:  2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ற வியூகங்களை 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்துவோம்.

 2024-இல் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் பல கட்சிகள் பல விதமாக உள்ளனர். உலகின் பிரச்சனை காலநிலை மாற்றம் அதை பற்றி யாரும் பேசுவதில்லை. 2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நிச்சய்யம் ஆட்சி அமைப்போம். இவ்வாறு கூறினார்.