பாரம்பரிய உடையில் மனைவியுடன் பொங்கல் கொண்டாடிய அன்புமணி ராமதாஸ்...

 
நேபாளத்தில் நாளை  ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிப்பு.. 


மனைவியுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.  

anbumani

பொங்கல் பண்டிகை என்றாலே உற்சாகம் தான்.  அதிலும் 2 ஆண்டுகளுக்குப் பின்னர்  கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி இந்த ஆண்டு அனைவரும் ஆனந்தமாக பொங்கல் கொண்டாடி  வருகின்றனர். அந்தவகையில் இன்று  திரைப்பிரபலங்கள்,  அரசியல் தலைவர்கள் என பலரும் குடும்பத்துடன்  தைப்பொங்கல் கொண்டாடினர். தைப்பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை அனைவரும் சமூக  வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.  

பாரம்பரிய உடையில் மனைவியுடன் பொங்கல் கொண்டாடிய அன்புமணி ராமதாஸ்...

இந்தப் பொங்கல் பண்டிகையில் ராமதாஸ் வீட்டு பொங்கல் கொஞ்சம் விசேஷமானது தான். ஏனெனில் அரசியலை தாண்டி பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ராமதாஸ்.  ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை வெளியிடுவார். அந்தவகையில் இந்த ஆண்டும் தைலாபுர தோட்டத்தில்  மனைவியுடன் பொங்கல் வைக்கும் படத்தை வெளியிட்டு, அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், உழவுக்கு வணக்கம் செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.