பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 9,000 ஆசிரியர்கள் தேவை - அன்பில் மகேஷ்..

 
anbil magesh

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப  9,000 ஆசிரியர்கள் தேவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.   
 
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TET தகுதித்தேர்வால் நிரப்பப்பட்டு வருகின்றன.  கடந்த 2022ம் ஆண்டில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்த நிலையில்,  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன் பிறகு கடந்த அக்டோபர் மாதம் TET முதல் தாள் தேர்வு நடத்தப்பட்டது.  அதனைத்தொடர்ந்து  TET தாள் – 2 தேர்வு பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  

பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 9,000 ஆசிரியர்கள் தேவை - அன்பில் மகேஷ்..

இந்த நிலையில் இன்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப  9,000 ஆசிரியர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.  மேலும், தற்போது அரசுப்  பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவே ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் கூறினார். திருவாரூரில் கொறடாச்சேரி அரசுப்பள்ளியில்  பசுமை பள்ளி திட்டத்தை  தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  முதற்கட்டமாக 500 பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்றும், வரும் நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.