ஒரு கை! 15 பேனாக்கள்! 15 தலைவர்கள்!! அசத்தும் இளம்பெண்

 
art

ஒரே கை, 15 பேனாக்கள், 15 தலைவர்கள், என அசத்திய பெண்ணை அடையாளம் காணுமாறு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா புதிய படைப்புகளையும் அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவார். அந்த வகையில், இன்று ஆனந்த் மகேந்திரா பதிவிட்ட இரு வீடியோவில், ஒரு இளம்பெண் தன்னுடைய அசாத்திய முயற்சியால் 15 பேனாக்கள் மூலம், ஒரே கையில் மகாத்மா காந்தி, நேரு , பகத் சிங், விவேகானந்தர் என 15 தலைவர்களின் புகைப்படங்களை வரைந்துள்ளார். 


இந்த வீடியோவுக்கு பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், இது எப்படி சாத்தியம்? இவர் ஒரு திறமையான கலைஞர் என்றும் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலையை விட அதிசயம் , இந்த சாதனை எங்கு செய்யப்பட்டது? என கூறினால் அந்த பெண்ணுக்கு தேவையான உதவியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவேன் என கூரியுள்ளார்.