தரைமட்ட பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் பலி

 
rain

பொள்ளாச்சி அருகே தரைமட்ட பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரசாமி (70). கூலி தொழில் செய்து வரும் இவர், இன்று பணி முடித்துவிட்டு மாலை பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டர்புதூரில் இருந்து ஆனைமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரசாமியை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. 

சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில், அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஆற்றங்கரையில் கரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர், பூச்சநாரி அருகே சுந்தரசாமி சடலமாகமீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக  ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.