வீட்டு வாசலில் படுத்திருந்த முதியவர் பாம்பு கடித்து பலி

 
death

திருக்கோவிலூர் அருகே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

death

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (70)வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டுவிரியன் விஷ பாம்பு கால் கட்ட விரலில் கடித்ததால் வலியால் துடித்த அவரை அவரது மனைவி அன்னக்கிளி ஆட்டோவில் அழைத்துக் கொண்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பழனிச்சாமி இறந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து அவரது மனைவி அன்னக்கிளி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர், வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை பாம்பு கடித்து பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,