இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு -கிருஷ்ணா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

 
sk

பழம்பெரும் தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு வருத்தமளிக்கிறது. தெலுங்கு சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் கிருஷ்ணா.   அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் . 

ka

கிருஷ்ணாவின் மறைவுக்கு என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கும் முதல்வர் ஸ்டாலின்,  அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா(79) காலமானார்.   மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்   ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சில மாதங்களுக்கு முன்னர்தான் கிருஷ்ணாவின் மனைவி காலமாகி இருக்கிறார்.

 தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா.  325 திரைப்படங்களில் நடித்துள்ளார்.   கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஸ்ரீ என்கிற படத்தில் நடித்துள்ளார். இவரின் மகன் மகேஷ்பாபு,   தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார்.