செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து

 
fire

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு, கடை இடிந்து முற்றிலும் சேதமானது. நான்கு கார்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

fire


திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் என்ற இடத்தின் அருகே ஸ்ரீமதுரை மீனாட்சி அம்மன் பட்டாசு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இன்று மாலை திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கடையை ஒட்டி இருந்த வணிக வளாகம் மற்றும் கடையின் மேல் புறம் இருந்த வீடு இடிந்து முற்றிலும் சேதமானது. மேலும் வீட்டின் மேல்புறம்  உரிமையாளர்கள் ஜெயராம் அவரது மனைவி ராணி வீட்டிற்குள் இருக்கலாம் என்ற நிலையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற வகையில் தேடி வருகின்றனர். 


இந்த வெடிவிபத்தில் கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மற்றும் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் உள்ளிட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன இந்த வெடி விபத்து குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும் இடிபாடுகளுக்குள் எவரேனும் சிக்கி உள்ளனரா என்ற கோணத்தில் செம்பட்டி போலீசாரும் தீயணைப்பு  துரையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.