பொண்ண கைய புடுச்சி இழுத்தியா? வடிவேலு ஸ்டைலில் திமுக அரசை கழுவி ஊத்திய ஊழியர்

 
l

கைய புடிச்சு இழுத்தியா..? என்ன கைய புடிச்சு இழுத்தியா..? பொண்ணு கைய புடிச்சு இழுத்தியா..? என்ன பொண்ணு கைய புடிச்சு இழுத்தியா..? என்று வடிவேலு காமெடி போல திமுக அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார் அரசு பெண் ஊழியர்.

 திமுக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  அந்த ஆர்ப்பாட்டத்தில்  பெண்மணி ஒருவர் பேசிய வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது . 


அந்த வீடியோவில்  பேசும் பெண்மணி,   ஸ்டாலின் அவர்களே.. மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களே என்று இருந்திருக்க வேண்டியது.   அதனை முதல்வராக மாற்றியது நாங்கள் தான் .  இன்றைக்கு அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் உங்களுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை 40 அறிக்கை வெளியிட்டிருப்பார்.

 டிபிஎஸ்க்கு அறிக்கை வந்திருக்கும்.   டி ஏ விற்கு அறிக்கை வந்திருக்கும்.   இந்த நேரத்தில் நம்ம நிதி அமைச்சரை மறந்து விட்டோம்.   அவர் உலக வங்கியை உச்சாணிக்கொம்பில் வைத்தவர்.    இன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் அவர் அமர்ந்து இருந்தால் அவர் உங்களை பார்த்து என்ன சொல்லி இருப்பார் தெரியுமா?   நீங்கள் ஒரு ஜி எஃப் அல்ல இரண்டு ஜிஎப்புக்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லி இருப்பார்.  நாம் செய்த தவறை அனுபவித்து வருகிறோம் . ஒருவேளை எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் இன்று ஸ்டாலின் நம்மை சந்தித்து இருப்பார் என்று சொல்லிவிட்டு,

 பொண்ண கைய புடிச்சு இழுத்தியா.. என்ன கைய புடிச்சு இழுத்தியா எனறு மாதிரி வடிவேலு காமெடி மாதிரி ஆகிவிட்டது நம்ம கதை.  ஐயா அகவிலைப்படி வேணும்.. என்ன விலை படி வேணும்.. ஐயா ஜிபிஎஸ் வேணும்.. என்ன ஜிபிஎஸ் வேண்டும்... ஐயா டி ஏ வேணும் என்ன டி ஏ வேணும்... என்று ஆகிவிட்டது நம்ம நிலைமை என்று பேசியிருக்கிறார்.