ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

 
professional courier professional courier

வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

The Professional Couriers (Customer Care) in New Delhi - Best Customer Care  in Delhi - Justdial


1989 ஆம் ஆண்டு ப்ரொபஷனல் கொரியர் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட தனியார் கொரியர் நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா முழுவதும் 2007ம் ஆண்டு முதல் துபாய் சிங்கப்பூர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கிளைகளுடன் இயங்கி  வருகிறது.நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் கத்தீட்ரல் கார்டன் பகுதியிலும்  பதிவு அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான நுங்கம்பாக்கம் ஆழ்வார்பேட்டை கிண்டி மண்ணடி உள்ளிட்ட ஆறு இடங்களிலும் தமிழக முழுவதும் 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் எதிர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த சேக் மொய்தீன் அகமது மீரான் என்பவர் இந்த நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனராகவும் இவருடன் மேலும் 5 பேர் இயக்குனர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் கொரியர் மூலம் தகவல் தொடர்பு மற்றும் பொருட்கள் பரிமாற்றம் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு வியாபாரம் அதிகரித்த நிலையில் முறையான கணக்கு காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததாகவும் அதன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.